பெரும்பாலான கனடியர்கள் விரும்பும் தன்னியக்க கார்கள்

car_ca15கனடியர்களில் பெரும்பாலான மக்கள் தன்னியக்க கார்களை நம்புவதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

இதில் அதிக அளவில் கியுபெக்கை சேர்ந்த 56.8 சதவீத மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஒன்ராறியோ 51 சதவீதம் மற்றும் அட்லாண்டிக் மாகாணங்கள் 50.1 சதவீதம் வாக்களித்துள்ளனர்.

மனிடோபா மற்றும் சஸ்கற்சுவான் மாகாணங்கள் 45.1 சதவீதம் என்ற குறைவான நம்பிக்கை வீதத்தை காட்டியுள்ளனர். அல்பேர்ட்டா 450 சதவீதம் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா 46.1 சதவிதகம் என்று பதில் அளித்து உள்ளனர்.

தன்னியக்க வாகனங்கள் இன்னமும் முற்றாக விற்பனைக்கு வரவில்லை என்றாலும் குறைந்த விபத்துக்கள், வாகனத்திற்குள் குறைந்த நேரம் இருத்தல், எரிபொருள் சேமிப்பு மற்றும் குறைக்கப்பட்ட நெரிசல் ஆகியன இந்த கார்களில் இருந்து கிடைக்கும் நன்மைகள் என்பதால் கனடியர்களில் பெரும்பாலானோர் தன்னியக்க கார்களை அதிகம் விரும்புகின்றனர்.

Share This Post

Post Comment