புகலிடக் கோரிக்கையாளர்கள் விவகாரம்: ஒன்ராறியோ – மத்திய அரசுக்கிடையில் மோதல்

Facebook Cover V02

canada-ministersகனடாவில் தஞ்சம் கோரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் ஒன்ராறியோ அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.

அந்தவகையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து ஒன்ராறியோ மாநில அரசு தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக மத்திய குடிவரவுத்துறை அமைச்சர் அஹமட் ஹுசெய்ன் தெரிவித்துள்ளார்.

கனடிய மத்திய குடிவரவுத்துறை அமைச்சர் அஹமட் ஹூசெய்னுக்கும், ஒன்ராறியோ மாநில குடிவரவுத்துறை அமைச்சருக்கும் (Lisa MacLeod) இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு நேற்று (சனிக்கிழமை) தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் மாநில அரசு குற்றம் சுமத்துவதை போல தவறான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் ஒன்ராறியோ அரசாங்கம் கனடிய விழுமியங்களுக்கு முரணான, ஆபத்தான முனைப்புகளை கைக்கொள்கின்றது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் கனடாவுக்குள் உள்வாங்கப்படும் குடிவரவாளர்களுடன் இணைக்காது, தனியான ஒரு நடைமுறையின் கீழேயே புகலிடக் கோரிக்கையாளர்களை உள்வாங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு நடைமுறைகளின் வேறுபாட்டையும் புரிந்துகொள்ளாது ஒன்ராறியோ அரசாங்கம் குழப்பகரமான கருத்துகளை வெளியிட்டு வருவது பொறுப்பற்ற செயல் என மத்திய குடிவரவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment