ஒன்ராறியோவில் புதிய சனநாயக கட்சிக்கான மக்கள் ஆதரவு அதிகரிப்பு

on_ndpஒன்ராறியோவில் புதிய சனநாயக கட்சிக்கான மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள ஒன்ராறியோ மாகாண சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகளுக்கான மக்களின் ஆதரவு குறித்து கருத்து கணிப்பொன்று இடம்பெற்றது.

இதன் அடிப்படையிலேயே, லிபரல் கட்சியைப் பின்தள்ளி புதிய சனநாயக கட்சி முன்னேறி மக்களின் ஆதரவைப் பெற்ற இரண்டாவது கட்சியாக பெயர்பெற்றுள்ளது. இதில் முற்போக்கு பழமைவாதக் கட்சி முன்னிலையில் உள்ளது.

ஒன்ராறியோவின் 2,534 வாக்காளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பொன்றில், 42.3 சதவீதம் பேர் முற்போக்கு பழமைவாதக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதேவேளை லிபரல் கடசிககு 22.1 சதவீதம் பேர் தமது ஆதரவினை வெளிப்படுததியுள்ள நிலையில், புதிய சனநாயகக் கட்சிக்கு 28.4 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர்.


Related News

 • பிரதமர் ட்ரூடோவின் எளிமையான சிங்கப்பூர் சுற்றுப் பயணம்
 • கனடாவில் அசாதாரண காலநிலை நீடிப்பு
 • குழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – புள்ளிவிபரம்
 • மூன்று திருடர்களை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
 • பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து
 • ஒஷ்வா பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
 • புயல்காற்றின் எதிரொலி – அட்லான்டிக் பிராந்தியம் இருளில் மூழ்கியது
 • ஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *