சிறுவர் பராமரிப்பு செலவீனம் 71 சதவீத அதிகரிப்பு – ஆய்வில் தகவல்

can221கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையில் சிறுவர் பராமரிப்பு செலவீனம் 71 சதவீத அதிகரிப்பினை எட்டியுள்ளதாக கனேடிய மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதான 28 நகரங்களிடையே ஏற்பட்டுவரும் சிறுவர் பராமரிப்பு செலவீனங்கள் தொடர்பில், மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மேற்கொண்டுள்ள நான்காவது ஆய்வு இது என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் 18 மாதங்களில் இருந்து இரண்டு வயது வரையிலான குழந்தைகளைப் பராமரிக்கும் முழு நேரக் காப்பகங்கள், இரண்டிலிருந்து மூன்று வயது வரையான சிறுவர்களுக்கான காப்பகங்கள் மற்றும் நான்கிலிருந்து ஆறு வயது சிறுவர்களுக்கான முன்பள்ளிகள் ஆகியவற்றின் செலவீன அதிகரிப்புகள் கருத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மிசிசாக மற்றும் வோன் பகுதிகளில் மாதத்திற்கு 1,400 டொலர்கள வரையில் குழந்தைகள் பராமரிப்பு செலவீனம் காணப்படுவதாகவும், ஆரம்பப் பள்ளிகளுக்கு ரொறொன்ரோவில் மாதத்துக்கு 1,212 டொலர்களும், ஒட்டாவா, கல்கரி, றிச்மண்ட் மற்றும் வன்கூவர் ஆகிய நகரங்களில் ஆயிரம் டொலர்கள் வரையில் தேவைப்படுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.






Related News

  • பிரதமர் ட்ரூடோவின் எளிமையான சிங்கப்பூர் சுற்றுப் பயணம்
  • கனடாவில் அசாதாரண காலநிலை நீடிப்பு
  • குழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – புள்ளிவிபரம்
  • மூன்று திருடர்களை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
  • பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து
  • ஒஷ்வா பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
  • புயல்காற்றின் எதிரொலி – அட்லான்டிக் பிராந்தியம் இருளில் மூழ்கியது
  • ஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *