கனேடிய வர்த்தக அமைச்சரின் இந்திய வருகை – நிதியமைச்சருடன் சந்திப்பு

ekuruvi-aiya8-X3

arun_jetleyகனேடிய வர்த்தக அமைச்சர், பிரான்சுவா பிலிப் சாம்பெய்ன் மற்றும் இந்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கும் இடையில், முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) இந்தியாவிற்கான இரண்டு நாள் அரச முறைப் பயணத்தை மேற்கொண்டிருந்த, கனேடிய வர்த்தக அமைச்சர், இந்தியாவின் நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து, இந்திய-கனேடிய வர்த்தகம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

மேலும் 2014 ஆம் ஆண்டில் இந்தியா–கனடாவிற்கிடையிலான வர்த்தக நடவடிக்கை, 30 சதவீதத்தால் அதிகரித்தமையும், அதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு தொடக்கம், 6.3. பில்லியனாக வருடாந்த வர்த்தக நடவடிக்கை இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இந்தியாவிற்கான தனது பயணத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும், கனேடிய வர்த்தக அமைச்சர் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment