ஆக்கத்திறனுள்ள ஒன்ராரியோ பூர்வீககுடி இளையோர் கௌரவிப்பு

can_2_1410திறமை வாய்ந்த பூர்வீககுடி இளைய எழுத்தாளர்கள் அறுவருக்கு,  பூர்வீககுடி  இளையோருக்கான James Bartleman  எழுத்தாக்க விருதினை ஒன்ராரியோ மாகாண அரசு (James Bartleman Aboriginal Youth Creative Writing Award) வழங்கி கௌரவித்துள்ளது.

இந்த விருது பூர்வீக இளைய எழுத்தாளர்களின்  ஆக்கங்களைப் பாராட்டுவதுடன் அவர்கள் தமது தனித்துவமான கண்ணோட்டங்களையும் மற்றும் அனுபவங்களையும் பரந்துபட்ட வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் வழி கோலுகின்றது.

2016 ஆம் ஆண்டில் பின்வருவோர் இந்த விருதினைப் பெறுகிறார்கள்.

 • மேல்நிலைப் பாடசாலையில் (high school) ஒரு மாணவரின் போராட்டமும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கற்பனையான  தினக்குறிப்புகள் என்ற ஆக்கத்திற்காக Aurora Gull  என்பவர் விருது பெறுகிறார்.
 • காயத்துக்குள்ளான ஒரு அரியவகை வெண்ணிற ஓநாயுடனான உண்மைச் சந்திப்பு என்ற ஆக்கத்திற்காக Jewel Moonias என்பவர் விருது பெறுகிறார்.
 • Taeo Baxter  என்ற 16 வயதான மெற்றிஸ் (Métis)  இனப் பையன்  “தனது உண்மையான சுயத்தைத் தேடும் ஆன்மீக வேட்கை” என்ற ஆக்கத்திற்காக விருது பெறுகிறார்.
 • தனது பாட்டியின் மரணம் பற்றிய ஓரங்க நாடகபாணியிலான கதைக்காக Cole Stevens-Goulais விருது பெறுகிறார்
 • Moonlight தீவின்  தெற்கே இரண்டு ஓநாய்களின் பயங்கரமான ஒரு பிரயாணம் என்ற ஆக்கத்திற்காக விருது பெறுகிறார் Isaiah Aguonie
 • மதுபோதையில் வாகனமோட்டியதால் ஏற்பட்ட விபத்தினால் தனது தந்தையை இழந்த அனுபவம் என்ற கற்பனைக் கதைக்காகCourtney Miller இந்த விருதினைப் பெற்றார்.

ஒன்ராரியோவின் Queen’s Park  இல் நடைபெற்ற இவ்விருது வழங்கும் வைபவத்தில் ஒன்ராரியோ மாகாணத்தின் Lieutenant Governor கௌரவ Elizabeth Dowdeswell அவர்களும், ஒன்ராரியோ மாகாணத்தின் 27 ஆவது Lieutenant Governor கௌரவ James Bartleman அவர்களும், குடிவரவு அமைச்சரின் பாராளுமன்றச் செயலாளரும் கலந்துகொண்டனர்.

இவ்விருது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஒன்ராரியோ குடிவரவு அமைச்சர் லாரா அல்பனீஸ் அவர்கள் “தமது கதைகளையும் ஆக்கங்களையும் தமது சமூகங்களுக்கு வெளியே கொண்டு செல்ல James Bartleman விருது ஒரு தளம் அமைத்துக் கொடுத்துள்ளது” எனக் கூறினார்.


Related News

 • சட்டவிரோத போதைப்பொருள் பாவனை – கனடாவில் நாளொன்றுக்கு 10 பேர் உயிரிழப்பு
 • அர்வாவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
 • ரொறன்ரோ பகுதியில் வாகன விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு
 • மிசிசாகுவா பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன
 • கஷோகி விவகாரம் – துருக்கியின் ஒலிப் பதிவுகளை செவிமடுத்ததாக கனடா ஒப்புதல்
 • அதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு
 • வின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
 • மிசிசாகாயில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *