கனடா மக்களுக்கு பனிப்புயல் எச்சரிக்கை

ekuruvi-aiya8-X3

pani-puyalகனடாவின் கடல்சார் மாகாணங்களில் பனிப்புயலின் தாக்கம் அதிகரிக்கும் எனவும், மணிக்கு 110 கிலோ மீற்றரும் அதிகமான புயல் வீசக்கூடும் எனவும் கனடா சுற்றுச் சூழல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், குறித்த பகுதிகளில் 25 சென்றி மீற்றர் வரையிலும் பனிப்பொழிவு பதிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கனடாவில் தற்போது அதிகரித்துள்ள பனிப் பொழிவு தாக்கத்தின் காரணமாக ஹலிவக்ஸ்-நோவ ஸ்கோசியாவில் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பனிப்பொழிவின் காரணமாக போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மறுபக்கம் தீவிர பனிப்பொழிவு மற்றும் புயல் காற்று காரணமாக மின்சாரத் தடைகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் கனடா சுற்றுச்சூழல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share This Post

Post Comment