கடன் அட்டை திருடிய காவல்துறை உத்தியோகத்தர் கைது

Thermo-Care-Heating

police142கடன் அட்டை திருடப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

ஹல்ட்டன் பிராந்திய காவல்துறையினர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன், Oakville காவல்துறையைச் சேர்ந்த 29 வயதான மிச்சேல் கெலாஸ் எனப்படும் காவல்துறை உத்தியோகத்தரே அவ்வாறு நேற்றுச் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டதுடன், பணி இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார் என்றும் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் Oakville பகுதியில் வீடு ஒன்று உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளச் சென்ற வேளையில், குறித்த அந்த காவல்துறை உத்தியோகத்தர் அங்கிருந்த கடன் அட்டை ஒன்றினைத் திருடியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ideal-image

Share This Post

Post Comment