ரொரன்ரோவில் வீடுகளில் தீப்பரவல்

Thermo-Care-Heating

fire_02நேற்று இரவு ரொரன்ரோ ஜங்சன் ட்ராங்கிள் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற தீப்பரவல் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லான்ஸ்டவுன் அவனியூ மற்றும் டுப்போன் வீதிப் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில், நேற்று இரவு 11.15 அளவில் இந்த தீப்பரவல் ஆரம்பித்துள்ளது.

அங்குள்ள வீட்டு மாடி ஒன்றின் முகப்பு பகுதியில் ஆரம்பமான தீ, தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தினைச் சென்றடைவதற்கு முன்னரே அருகில் உள்ள வீட்டுக்கும் பரவியதாக கூறப்படுகிறது.

எனினும் அந்த வீடுகளில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவிலலை என்ற போதிலும், இருவருக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அவர்கள் அருகிலிருந்த மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் தற்காலிகமாக தங்குவதற்காக பேருந்துகளும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட நிலையில், இந்த தீப்பரவல் குறித்து அதகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

ideal-image

Share This Post

Post Comment