வட்டி வீதத்தினை அதிகரித்தது கனடிய மத்திய வங்கி

Facebook Cover V02

canedian-bankநாட்டின் பொருளாதார நிலைகளை கருத்திற்கொண்டு கனேடிய மத்திய வங்கி அதன் வட்டி வீதத்தினை 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

6 வாரங்களுக்கு ஒரு முறை நாட்டின் வட்டிவீதம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை முடிவு செய்து வரும் மத்தியவங்கி இம்முறை 1.25 சதவீதமாக அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதுடன், குறித்த திட்டம் கடந்த புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் 2008 ஆம் ஆண்டின் பின்னர் கனடாவின் வங்கி வட்டிவீதம் முதல் தடவையாக இந்த அளவுக்கு உச்சத்தினைத் தொட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

கடந்த கோடை காலத்தின் பின்னர் கனடிய மத்திய வங்கி 4 ஆவது தடவையாகவும், எனினும் கடந்த ஆறு மாதங்களில் முதல் தடவையாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள வரி அதிகரிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் அடுத்த கட்ட வட்டிவீத மீள் பரிசீலனை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கனடிய மத்திய வங்கி அதன் வட்டி வீதத்தினை 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளமையானது பலருக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Share This Post

Post Comment