கனடாவில் கஞ்சா விற்பனைக்கு சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டது – தமிழர்கள் கவலை

ekuruvi-aiya8-X3

kanja14கனடாவில் கஞ்சா விற்பனை செய்வதற்கு அந்நாட்டு அரசு இன்று (புதன்கிழமை) சட்டமூலத்தினை அமுல்படுத்தியதனால் கனடாவில் வாழும் தமிழர்கள் தமது கவலையினை வெளிப்படுத்தியுள்ளனர்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையினால் சிறுவர்களும் இளைஞர்களும் கெட்டு போய்விடுவார்கள் எனவும் கஞ்சா பாவனையின் குறுகிய மற்றும் நீண்டகால விளைவுகளைப் பார்க்கும்போது மார்புப் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபானம் போன்றவற்றை போலவே கஞ்சாவும் சர்வதாரணமாகக் கிடைக்கும். ஆகவே இது மோசமான விளைவுகளைத் தோற்றுவிக்குமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் மருத்துவத்திற்கு மட்டும் கஞ்சாவைப் பயன்படுத்த அனுமதியிருந்த நிலையில் தற்போது கஞ்சாவை விற்பனை செய்வதற்கு கனடிய நாடாளுமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment