முதல் முறையாக தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரம்

ekuruvi-aiya8-X3

electronic_votingகனடாவில் தேர்தலில் போது கடுதாசி (paper) மூலமான வாக்குச் சீட்டைப் பயன்படுத்தி வந்த நிலையில், முதன் முறையாக வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தவுள்ளதாக ஒன்ராறியோ தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒன்ராறியோ சட்டமன்ற தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளதுடன், இந்த முறை காரணமாக வாக்களிப்பதை இலகு படுத்தி வேகமாக்குவதுடன், வாக்கு எண்ணிக்கையும் துரிதப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த முறை வாக்காளர் பதிவு அட்டைகள் இயந்திரங்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து அங்குள்ள அதிகாரிகளால் வாக்குச் சீட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அந்த வாக்குச் சீட்டில் தமக்கான தெரிவுகளை புள்ளியிட்ட பின்னர், அவற்றை அந்த அதிகாரிகளிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும், அதிகாரிகள் அவற்றை வாக்களிப்பு இயந்திரத்தினூடாக செலுத்துவார்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் ஊடான வாக்களிப்பு முறையானது ஏற்கனவே 2016 ஆம் ஆண்டில் இரண்டு இடைத் தேர்தல்களிலும், மேலும் சில நகரசபைத் தேர்தல்களிலும் பயன்படுத்தி பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே இந்த புதிய முறையானது வாக்காளர்களுக்கு மிக மிக இலகுவானதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், கைகளால் வாக்குகளை எண்ணுவதை விடவும் இது நம்பகமானதாகவும், துல்லியமானதாகவும், துரிதமானதாகவும் இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment