நோர்த் யோர்க் தீ விபத்து: இருவர் கவலைக்கிடம்

Thermo-Care-Heating

nyogநோர்த் யோர்க் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில், இருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யங் வீதி மற்றும் செப்பேட் அவனியூவில் உள்ள பொரஸ்ட் லேன்வே அடுக்கு மாடிக் குடியிருப்பின் 20ஆவது மாடியில் நேற்று (திங்கட்கிழமை) குறித்த தீப்பரவல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் கடுமையான போராட்டத்தின் பின், தீயினை கட்டுக்குள் கொண்டுவந்ததோடு அந்த வீட்டினுள் காயமடைந்து இருந்த இருவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், தீ பரவலுக்கான காரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ideal-image

Share This Post

Post Comment