நோர்த் யோர்க் பகுதியில் 7 வாகனங்கள் மோதி விபத்து

Thermo-Care-Heating

northyork-1நெடுஞ்சாலை 401இல், நோர்த் யோர்க் பகுதியில் நேற்று பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.

நெடுஞ்சாலையின் கிழக்கு நோக்கிய வழித்தடத்தில், வெஸ்டன் வீதிப்பகுதியில் இடம்பெற்ற அந்த விபத்தில் ஏழு வாகனங்கள் மோதிக்கொணடதாகவும், இதில் காயமடைந்தவர்களில் குறைந்தது இரண்டுபேர், மோசமான காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முற்பகல் 11.30 அளவில் இடம்பெற்ற இந்த விபத்தினைத் தொடர்ந்து, நெடுஞ்சாலையின் கிழக்கு நோக்கிய அதிவிரைவு வழித்தடங்கள் ஊடான போக்குவரத்துக்ள பல மணி நேரங்களுக்கு தடைப்பட்டது.

இந்த விபத்தில் இரண்டு சரக்கு ஊர்திகள், ஒரு சிற்றூர்தி மற்றும் மேலும் பல பயணிகள் வாகனங்கள் தொடர்பு பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சரக்கு ஊர்திகளுக்கு நடுவே அகப்பட்டு விபத்துக்குள்ளான வாகனம் ஒன்றினுள் சிக்குண்டிருந்த ஒருவர், பாரதூரமான காயங்களுடன் மீட்கப்பட்டதாக சம்பவ இடத்திலிருந்து கிடைத்த ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு பேர் மிகவும் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலும் சில வாகனங்களின் சாரதிகளும் காயங்களுக்கு உள்ளானதாகவும், எனினும் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் மாகாண காவல்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ideal-image

Share This Post

Post Comment