வாகனம் மோதி, தலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

ekuruvi-aiya8-X3

van_acc2இன்று அதிகாலை பார்க்டேல் பகுதியில் வாகனம் ஒன்றினால் மோதுண்ட பாதசாரி ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீஃபோர்ட் அவனியூ மற்றும் புரோக் அவனியூ பகுதியில், இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்று்ளளது.

விபத்தில் படுகாயமடைந்தவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் எனவும், பாரதூரமான நிலையில் காணப்பட்ட அவர் உடனடியாகவே ரொரன்ரோ தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்து்ளளனர்.

இந்த விபத்துடன் தொடர்புடைய வாகனம் சம்பவ இடத்திலேயே தரித்திருந்ததாகவும், மேலதிக விசாரணைகள் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சம்பவ இடத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Post

Post Comment