பூனம் கவுர் மீது இயக்குனர் புகார்

ekuruvi-aiya8-X3

poonam_kavur‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தின் மூலம் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்தவர் பூனம்கவுர். பின்னர் சில படங்களில் நடித்தார். தற்போது ‘நண்டு என் நண்பன்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஆண்டாள் ரமேஷ் இயக்கத்தில் ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. பூனம் கவுர் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் பூனம் கவுர் திடீர் என்று தங்கி இருந்த ஓட்டல் அறையை காலி செய்து விட்டு ஐதராபாத் சென்று விட்டார். அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘என்னால் இந்தப்படத்தில் நடிக்க முடியாது. இனி எதுவும் பேச விரும்பவில்லை’’ என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கூறிய படத்தின் இயக்குனர் ஆண்டாள் ரமேஷ், ‘‘எங்கள் படத்தின் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க பூனம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருடைய உடைகளை அவரே தேர்வு செய்வதாக கூறினார். சரி என்றோம். நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்துக்கொடுத்தோம். அவர் அதிக விலைக்கு உடைகள் வாங்க பணம் கேட்டார். இது சிறிய பட்ஜெட் படம் என்றோம். இதனால் பிரச்சினை செய்தார். தற்போது யாரிடமும் சொல்லாமல் ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு போய்விட்டார். காரணமும் தெரிவிக்கவில்லை.

இதனால் தயாரிப்பாளருக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி நடிகர் சங்கத்திலும், தாயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் செய்ய உள்ளோம்’’. என்று கூறினார்.

 

Share This Post

Post Comment