கனடாவில் நால்வரை கொலைசெய்த சந்தேகநபர் கைது

Facebook Cover V02

can-1208கனடாவின் ஃபெடரிக்டனில் பொலிஸார் இருவர் உட்பட நான்கு பேரைக் கொலை செய்த சம்பவத்தின் கொலையாளியை அந்நாட்டுப் பொலிஸார் கைதுசெய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கிழக்கு கனடாவிலுள்ள ஃபெடரிக்டன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நால்வர் கொலைசெய்யப்பட்டனர். மெதிவ் வின்சென்ட் றைமோனட் (வயது-48) என்பவரே கொலையாளியென அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக நேற்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த சம்பவத்தில் கொலையுண்டவர்கள் அடையாளம் காணப்பட்டு பெயர் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அந்நாட்டு பிரஜைகளான பொபீ லீ ரைட் (வயது-32), டொனாலட் எடம் ரொபிசைவுட் (வயது-42) ஆகிய இருவருமே கொலையுண்டவர்கள் ஆவர். சாரா மாயீ பேர்ன்ஸ் (வயது-43), லோரன்ஸ் ரொப் (வயது-45) ஆகியோர் கொலையுண்ட பொலிஸ் அதிகாரிகள் என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எனினும் குறித்த கொலைச்சம்பவம் எந்த ஆயுதத்தை உபயோகித்து மேற்கொள்ளப்பட்டது என்றும் இக்கொலைக்கான நோக்கம் என்னவென்றும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லையென பொலிஸார் கூறுகின்றனர்.

ஆனால், ஆரம்ப கட்ட தகவலின் போது, இது துப்பாக்கிச்சூட்டு சம்பவம் என்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment