சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கனேடிய போதகர் தேவாலய சேவையில் பங்கேற்கிறார்

Facebook Cover V02

can120817வடகொரிய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கனேடிய போதகர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒன்ராறியோ மிசிசாகா தேவாலய சேவையில் இணைந்துகொள்ளவுள்ளார்.

கனடாவின் மிகப் பிரசித்தமான தேவாலயங்களில் பணியாற்றிவந்த ஹியோங் சோ லிம் என்ற குறித்த போதகர், வடகொரிய ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். அங்கு கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இரண்டு வருடங்களுக்கும் மேலாக வடகொரிய சிறையில் வாடிய அவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டார்.

இவரது விடுதலை தொடர்பில் ஆராய்வதற்காக கனடாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான குழுவொன்று அண்மையில் வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Share This Post

Post Comment