பொலிசாரால் கொல்லப்பட்ட இளைஞரை திருத்த முயன்ற தமிழ்ப் பேராசிரியர்

ekuruvi-aiya8-X3

tamilteacher_1208கனடிய நகரொன்றில் மக்களிடையே பெரியதொரு தாக்குதலை நடாத்தி பேரிழப்பை ஏற்படுத்தவிருந்த சமயத்தில் கனடியப் பொலிசாரால் கொல்லப்பட்ட இளைஞரை அவரது நிலையிலிருந்து மாற்றுவதற்கு தமிழ்ப் பேராசிரியர் ஒருவரே முயன்று வந்துள்ளார்.

கலாநிதி அமர்நாத் அமரசிங்கம் என்ற இப் பேராசிரியர் இணைய வழி மற்றும் உள்@ர்ப் பாதுகாப்பிற்கான திறனாய்வு மையத்தின் ஒரு அங்கத்துவர் என்பதோடு, சமூக விஞ்ஞர்ன மற்றும் மனிதாபிமான ஆராய்ச்சி மையத்தின் ஒரு அங்கத்துவர் என்பதோடு அதீத மதப் போக்குடைய இஸ்லாமியர்களின் ஜிகாடிஸம் தொடர்பான விசேட அனுபவத்தைக் கொண்டவர் என்பதும், இதன் காரணமாகவே,

கனடியப் பாதுகாப்புப் பிரிவின் ஆலோசனையின் பேரில் மேற்படி இளைஞனை அவன் சென்று கொண்டிருந்து இஸ்லாமியக் கடும்போக்குக் கொள்கையிலிருந்து மாற்றுவதற்கான ஆலோசகராகச் செயற்பட்டிருந்தார்.

கலாநிதி அமர்நாத் அமரசிங்கம் அவர்கள் கனடியத் தமிழர்களிடையே ஒரு அறியப்பட்ட சமூக வழிகாட்டி என்பதோடு, சமூக சேவைகளிலும் அர்ப்பணித்துள்ளதோடு, ஆங்கில ஊடகங்களிற்கான ஒரு பத்தியாளனாக இலங்கை விவகாரம் உள்ளிட்ட பல விவகாரங்களை எழுதிவருபவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment