அமெரிக்காவை ஆபத்து நெருங்குகிறது – கனடிய நிபுணர் எச்சரிக்கை

ekuruvi-aiya8-X3

peter_variyan12சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருட்களுக்கு வரி விதித்துள்ளமையானது, அமெரிக்காவிற்கு நிச்சயமாக ஆபத்தை ஏற்படுத்துமென கனடிய நிபுணரான பீற்றர் வாரியன் எச்சரித்துள்ளார்.

ரொறன்ரோ தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சீன – அமெரிக்க வர்த்தக போரானது, எதிர்மறையான விளைவுகளையே தோற்றுவிக்குமென சுட்டிக்காட்டியுள்ள அவர், இதனால் எந்தத் தரப்பும் பயனடையப்போவதில்லையென கூறியுள்ளார்.

தற்போதைய நிலை பாதகமான சமிக்ஞைகளையே தோற்றுவித்துள்ளதென குறிப்பிட்டுள்ள பீற்றர் வாரியன், கனடாவும் அவதானமாக இருக்கவேண்டியது அவசியமென எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் செயற்பாடானது, அந்நாட்டிற்கு குறுகிய காலத்தில் பாதிப்பை ஏற்படுத்துமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காரணம் சீனாவும், ஐரோப்பிய ஒன்றியமும் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்றதென்றும் அவ்வாறான நிலையில் இவ்வரிவிதிப்பை மேற்கொண்ட அமெரிக்கா பின்னடைவை சந்திக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share This Post

Post Comment