குயீன் எலிசபெத் நெடுஞ்சாலையில் வாகன விபத்து – ஒருவர் படுகாயம்

ekuruvi-aiya8-X3

Accident_Eகுயீன் எலிசபெத் நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்தவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஹமில்ட்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன விபத்தில் காயமடைந்தவர் ஆண் என தெரிவித்துள்ள பொலிஸார் எனினும், அவர் குறித்த மேலதிக தகவல் எதனையும் வெளியிடவில்லை.

விபத்துக்கான காரணம் தொடர்பில் விபரங்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குயீன் எலிசபெத் நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிய வழித்தடத்தில், ஓக்வைல் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த விபத்து இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment