கனேடிய பேராசிரியர் ஈரான் சிறையில் மரணம்

Thermo-Care-Heating

canda_profesஈரானிய கனேடிய பேராசிரியரும், சுற்றுச் சூழல் ஆர்வலருமான கவஸ் சைய்ட் எமாமி ஈரானில் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது மகன் ராமின் சைய்ட் எமாமி வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவு ஒன்றின் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தனது தந்தை கடந்த 14ஆம் நாள் ஈரானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும், இவ்வாறான நிலையில் அவர் உயிரிழந்த தகவல் வெள்ளிக்கிழமை தனது தாயாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது தந்தை தற்கொலை செய்துகொண்டதாக ஈரானிய அதிகாரிகளால் கூறப்படும் நிலையில், அதனைத் தம்மால் நம்பமுடியாதுள்ளதாகவும், அவர் அவ்வாறு தற்கொலை செய்து கொள்வதற்கான சாத்தியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரசியல் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் பேராசிரியராக இருந்த அவர், கடந்த ஆண்டு கொள்கைவாத அரசுகள் மற்றும் இனவாதம் என்பவற்றால் கோட்பாட்டு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஏற்படும் தாக்கங்கள் என்ற தலைப்பில் பேருரை ஒன்றினையும் ஆற்றியிருந்தார்.

அத்துடன் ஈரானில் உள்ள வனவிலங்குகளை பாதுகாக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒனறின் நிர்வாக இயக்குனராகவும் பட்டியலிடப்பட்டிருந்த அவர் மீது உளவு பார்த்ததாக ஈரானிய அதிகாரிகளால் குற்றஞ்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ideal-image

Share This Post

Post Comment