கனடாவில் வேலைவாய்ப்பு – 40 ஆண்டு காணாத அதிகரிப்பு

Thermo-Care-Heating

job121கனடாவில் வேலை பெற்றவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டு வேலை அற்றவர்களின் சதவீதம் கடந்த 40 ஆண்டுகளாக காணாத அளவு முன்னேற்றத்தை கண்டுள்ளது.

அண்மையில் வெளியான புள்ளிவிபரத் தகவலின் படி 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலையற்றோரின் சதவீதம் 5.7 ஆக குறைவடைந்துள்ளதாகவும், குறித்த இந்த அளவு கனடாவின் வேலையற்றோரின் சதவீதத்தில் கடந்த 40 ஆண்டுகள் காணாத அளவு குறைவை ஏற்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்னராக கடந்த 1976ஆம் ஆண்டிலேயே கனடாவில் வேலையற்றோர் சதவீதம் இந்த அளவு குறைவானதாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மொத்த வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 4,22,500ஐத் தொட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2017ஆம் ஆண்டு ஒக்டோபர், நவம்பா, டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் 1,93,400 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும், 1976ஆம் ஆண்டின் பின்னர் மிகக்குறுகிய காலத்தில் கிடைக்கப்பெற்ற அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்பு இது எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இதற்கு முன்னர் 1974ஆம் ஆண்டில் கனடாவில் வேலையற்றோர் வீதம் மிகக் குறைந்த அளவாக 5.6 சதவீதமாக பதிவானமை குறிப்பிடத்தக்கது.

ideal-image

Share This Post

Post Comment