சட்பெரி பகுதியில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள்

satberiசட்பெரி பகுதியில் வீட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு வெடி பொருட்களை இவ்வாரத்தில் பத்திரமாக கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

539 டெட்மேன் ஏரி பகுதியில், வெடி பொருட்கள் இருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில், குறித்த வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தேடுதலுக்கான அனுமதியுடன் குறித்த வீட்டிற்குள் நுழைந்த பொலிஸார், ஒரு கொட்டகையில் இருந்து குறித்த வெடி பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

வெடிபொருள் தொடர்பான வல்லுனர்கள், குறித்த வெடி பொருட்களை கண்டறிவதற்கும், குண்டுத் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், ஒரு ரோபோவை பயன்படுத்தியதாக குறிப்பிட்டனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் யாரேனும் கைது செய்யப்பட்டார்களா என்பது குறித்து எவ்வித தகவல்களையும் வெளியிடாத பொலிஸார், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






Related News

  • மிசிசாகுவா பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன
  • கஷோகி விவகாரம் – துருக்கியின் ஒலிப் பதிவுகளை செவிமடுத்ததாக கனடா ஒப்புதல்
  • அதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு
  • வின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
  • மிசிசாகாயில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்
  • கனடாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட உலகப் போர் நினைவுதினம்
  • ஒட்டாவாவில் குளிர் காலநிலை ஆரம்பம்
  • விமான நிலையத்திற்கு அச்சுறுத்தல் – ஹமில்டன் இளைஞன் கைது
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *