கனடா மன்னிப்புக் கோர வேண்டும்! – சவுதி அரேபியா

Facebook Cover V02

honey-vabaசவூதி அரேபியாவின் மனித உரிமை விவகாரங்களை விமர்சனத்திற்கு உட்படுத்தியதால் கனடா மன்னிப்பு கோர வேண்டுமென சவுதி அரேபிய அரசியல் ஆய்வாளரான ஹனி வஃபா வலியுறுத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகள் விரிசலடைந்துள்ளதை அடுத்து அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

சவுதி அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட சிவில் சமூக ஆர்வலர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று கனேடிய வௌிவிவகார அமைச்சர் மற்றும் தூதரகம் என்பன வலியுறுத்திய பின்னர் இந்த இராஜதந்திர சர்ச்சை எழுந்தது.

கனடா வௌிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில், சவூதி அரேபியாவில் சிவில் சமூக மற்றும் பெண் உரிமை தொடர்பான ஆர்வலர்களின் கைதுகள் தொடர்பாக கனடா மிகவும் கவலை கொண்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். அத்தோடு, சவூதி அரேபிய அதிகாரிகள் அனைத்து மனித உரிமை ஆர்வலர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றும் அந்த பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையிலேயே சவுதி அரேபிய அரசியல் ஆய்வாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கனேடிய மனிதவுரிமை ஆர்வலரான சமர் படவாய் மற்றும் அவரது உறவினரான என்சாஃப் ஹய்டர் ஆகிய இருவரும் சவுதி அரேபியாவில் கைதுசெய்யப்பட்டனர். அதேவேளை, ஹய்டரின் கணவரான ரய்ப்ஃ படவாய் என்பவர் இஸ்லாத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 2012 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு 1000 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டதுடன், 10 வருட சிறைத் தண்டனையையும் அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment