சேர்.ஜோன் ஏ மக்டொனால்டின் சிலையை அகற்றுமாறு கோரிக்கை

ekuruvi-aiya8-X3

john_mechnoldenவன்கூவர் விக்டோரியா நகரசபை கட்டிட நுழைவாசலில் உள்ள சேர். ஜோன் ஏ மக்டொனால்டின் சிலையை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Esquimalt Nation அமைப்பின் இயக்குனரான கேட்டி ஹீப்பர், வன்கூவர் விக்டோறியா நகரசபையிடம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

ஜோன் மக்டொனால்ட் ஒரு யுத்தக்குற்றவாளி எனவும், இதன்காரணமாக குறித்த பகுதி ஊடாக பயணிப்பவர்கள் அவருடைய சிலையை சேதப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே குறித்த சிலையை அகற்றுவதன் ஊடாக வன்கூவர் நகரத்தின் நல்லிணக்கத்தை மேம்படுத்த முடியும் எனவும் அவர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Esquimalt Nation நிறுவனமானது விக்டோரியாவில் மூத்த குடிகளுக்கு சேவை வழங்கும் ஒரு தொண்டு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment