ஒன்ராறியோ ஏரியை கடக்க முற்பட்ட 16 வயது யுவதிக்கு தோள்பட்டையில் காயம்

youvathi-10ஒன்ராறியோ ஏரியை முழுமையாக நீந்தி கடக்க முற்பட்ட யுவதி ஒருவர் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த முயற்சியை கைவிட்டுள்ளார்.

ஒட்டாவா பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாயா என்ற குறித்த இளம் பெண் 88 கிலோமீற்றர் நீளமுடைய ஏரியை கடக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இருப்பினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது தோள்பட்டையில் காயம் ஏற்படவே அவர் ஏரியில் இருந்து மீட்கப்பட்டார்.

குறித்த யுவதி 20 மணி நேரங்களில் 35 கிலோமீற்றர் தூரத்தை கடந்திருந்ததாகவும் இருப்பினும் 4 மணி நேரத்திற்கு முன்பே அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்த அவரது தந்தை அவர் நீரில் இருந்து வெளியில் வர முயற்சிக்கவில்லை என கூறினார்.

இருப்பினும் அவரது பயிற்றுவிப்பாளரும் தந்தையும், இதனை அறிந்து நீரில் இருந்து அவரை மீட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு Niagara ஏரியை 24 மணி நேரத்தில் கடக்கும் முயற்சியில் 300 மீட்டர் தூரத்தை அடைந்த போது, அங்கு மின்னல் தாக்கம் அதிகமாக இருந்தமை காரணமாக, அவர் நீரில் இருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






Related News

  • பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து
  • ஒஷ்வா பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
  • புயல்காற்றின் எதிரொலி – அட்லான்டிக் பிராந்தியம் இருளில் மூழ்கியது
  • ஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்
  • ரொறன்ரோவில் சாரதிகளுக்கு எச்சரிக்கை
  • சட்டவிரோத போதைப்பொருள் பாவனை – கனடாவில் நாளொன்றுக்கு 10 பேர் உயிரிழப்பு
  • அர்வாவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
  • ரொறன்ரோ பகுதியில் வாகன விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *