ஹாலிவுட்” பாணித் தாக்குதல்களில் இராணுவ ஆளில்லா விமானங்கள் ஈடுபடுத்தப்படாது

can_10062அண்மையில் வெளியிடப்பட்ட கனடாவின் பாதுகாப்புக் கொள்கை மறு சீராய்வில் கனேடிய ஆயுதப் படைகளுக்கு ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களைக் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தியை வாசிப்பவர்கள் பலருக்கு “ஹாலிவுட்” திரைப்படங்களில் வரும் ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல் காட்சிகள் கண்முன் தோன்றக்கூடும்.

ஆயினும் ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி தனிநபர்களின் கொலைகள் இடம்பெறாது எனக் கனேடிய பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஜொனத்தான் வான்ஸ் அவர்கள் கூறியுள்ளார்.

உலகின் பல பகுதிகளிள் அமெரிக்கா அத்தகைய விமானங்களைப் பயன்படுத்தி நூற்றுக் கணக்கானோரை இலக்கு வைத்துக் கொலைசெய்துள்ள நிலையில், இந்த விமானங்களின் கொள்வனவு மற்றும் பயன்பாடு தொடர்பாக வாதப்-பிரதிவாதங்கள் நிலவுகின்றன.

கனேடியப் படைகளைப் பொறுத்தவரை ஆளில்லா விமானங்கள் மற்றுமொரு ஆயுதமாக மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும், எத்தகைய இலக்குகளைத் தாக்குவது, எந்தச் சூழ்நிலைகளில் தாக்குதல்களை நடாத்துவது, பொதுமக்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படாவண்ணம் எவ்வாறு தாக்குதல்களை நடாத்துவது தொடர்பான விதிகள் ஆளில்லா விமானங்களுக்கும் பொருந்தும் எனவும் ஜெனரல் ஜொனத்தான் வான்ஸ் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

Share This Post

Post Comment