அமெரிக்கர்களால் பயன்படுத்தப்பட்ட அணுகுண்டு கனடாவில் கண்டுபிடிப்பு

sdsd

US_Kunduவியாபார நோக்கத்திற்காக முக்குளிப்பவர் ஒருவர் அமெரிக்க படையினரிடம் இருந்து காணாமல் போன அணுகுண்டு ஒன்றினை கனடாவில் கண்டெடுத்துள்ளார்.

கடல் வெள்ளரி எனப்படும் ஒன்றிற்காக முக்குளித்த ஒருவர் பிரிட்டிஷ் கொலம்பிய கடல் பகுதியில் குறித்த அணுகுண்டினை கண்டெடுத்துள்ளார்.

குறித்த அணுகுண்டானது பார்வைக்கு ஒரு பறக்கும் தட்டுப் போன்று காட்சியளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனை பரிசோதித்த தேசிய இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் இது தொடர்பில் தெரிவிக்கையில் 1950ஆம் ஆண்டு காலப்பகுதியல் குறித்த பகுதியல் அமெரிக்க படையினால் முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கைகளின் போது இது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் எவ்வாறாயினும் செயலிழந்த அணுகுண்டாவதே அது தென்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஏவ்வாறான போதும், கண்டுபிடிக்கப்பட்ட குறித்த அணுகுண்டு தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share This Post

Post Comment