ரொறன்ரோவின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு – மின்சாரம் தடை

Facebook Cover V02

trono-08ரொறன்ரோவின் சில பகுதிகளில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பெய்த கனமழை காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது.

மேலும் குறித்த பகுதிக்கான மின்சாரமும் தடைபட்டுள்ளதாக ரொறன்ரோ ஹைட்ரோ தெரிவித்துள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக இரவு 10 மணி வரை 16 ஆயிரம் வடிக்கையாளர்களுக்கான மின் விநியோகம் உடனடியாக தடைபட்டுள்ளது.

இந்நிலையில் பின்னர் மேற்கொண்ட திருந்த பணிகளால் 10:30 மணியளவில் சுமார் 8 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மின்விநியோகம் சீர் செய்யப்பட்டது என ரொறன்ரோ ஹைட்ரோ தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கனமழை காரணமாக வீதிகளில் வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment