விபத்தினால் யுவதி படுகாயம்

ekuruvi-aiya8-X3

Accident_Eகனடா ஸ்கார்பாரோவில் பகுதியில் நடந்த வாகன விபத்தில் இளம்யுவதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 20 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவர் மீது பேருந்து ஒன்று மோதியுள்ளது. எனினும் குறித்த பேருந்து தொடர்பில் இதுவரையிலும் விபரங்கள் எதுவும் தெரியவரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஆபத்தான நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதி தொடர்பாகவும் இது வரையிலும் மேலதிக தகவல்கள் தெரியவில்லை எனவும், அவர் அடையாளப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விபத்து நடைபெற்ற பாதையின் பகுதியை மறைத்து பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றார்கள்.

கடந்த 3ஆம் திகதியும் (புதன்கிழமை) இதே பகுதியில் விபத்து ஒன்று ஏற்பட்டு இருவர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment