16 வயது வாலிபன் கடலில் மூழ்கி மரணம்

ekuruvi-aiya8-X3

16youngman_0708சிம்கோ லேக் பார்ரியில் உள்ள சென்ரெனியல் கடலில் முழ்கி, 16 வயதுடைய வெளிநாட்டு சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 6 மணியளவில் கடலில் நிராடிக்கொண்டிருந்த பெயர் குறிப்பிடபடாத இச்சிறுவன் காணாமல் போனதையடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இதையடுத்து, மனித சங்கிலி தொடர் ஒன்று ஏற்படுத்தப்பட்டு தீயணைப்பு ஊழியர்கள் மிதவைகளில் நீந்தி தேடுதல் நடாத்தினர். ஒரு மணித்தியாலத்தின் பின்னர் 25 முதல் 30 அடி தண்ணீருக்கு கீழே இருந்து சிறுவன் நாடித்துடிப்பு அற்ற நிலையில் கண்டு பிடிக்கப்பட்டான்.

குறித்த சிறுவன் தாயாருடன் வெளி நாடு ஒன்றில் இருந்து கனடாவிற்கு வருகை தந்துள்ளதாகவும், நியமிக்கப்பட்ட நீச்சல் பகுதிக்கு வெளியே நீந்தியதாகவும் தகவல் வெளியிட்டுள்ள பொலிஸார், இச்சிறுவனின் பெயர் உள்ளிட்ட விடயங்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

சம்பவத்தின் பின்னர் சென்ரெனியல் கடலின் நுழைவாயில் பகுதி மூடப்பட்டு விசாரணையின் பின் திறந்துவிடப்பட்டது.

Share This Post

Post Comment