நீரில் மூழ்கும் Woodbine கடற்கரை- நேரில் பார்வையிட்ட நகரபிதா

ekuruvi-aiya8-X3

nagara-pithகடந்த இரண்டு நாட்களாக பெய்த கனத்த மழை காரணமாக Woodbine கடற்கரையின் பல பகுதிகள்  நீரினுள் மூழ்கியுள்ளன.

கடந்த சில வாரங்களாக அந்த பகுதியில் மழை பொழிந்து நிலம் ஈரமாக காணப்பட்ட  நிலையில், கடந்த இரண்டு நாட்களில் பெய்த 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை காரணமாக ஒன்ராறியோ ஆற்றின்  நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

இந்த கன மழை காரணமாக ஆறுகள், நீர்த் தேக்கங்கள் நிரம்பி வழிந்து வெள்ளம் பாய்ந்தமையால், ரொரன்ரோவில் பல வீடுகளின் கீழ்த் தளங்களில் வெள்ள நீர் புகுந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

ரொரன்ரோ ஆற்றிலும் 1970ஆம் ஆண்டின் பின்னர் முதன் முறையாக இதுவரை காணப்படாத அளவு நீர்மட்ட அதிகரிப்பு பதிவாகியுள்ள நிலையில், கடற்கரைகளில் அலைகளின் வேகமும் அதிகரித்து காணப்பட்டதுடன், Woodbine கடற்கரையின் பெரும்பாலான பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு  பல பகுதிகளை நீர் சூழ்ந்துள்ள நிலையில்  Woodbine கடற்கரைப் பகுதிக்கு ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி நேரில் சென்று நிலைமையினை அவதானித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை அந்த பகுதிகளைப் பார்வையிட்ட அவர்,  தொடர் மழை, ஏரியின்  நீர் மட்ட அதிகரிப்பு, அலைகளின் வேகம் என்பன இவ்வாறு இந்தக் கடற்கரைப் பகுதியை நீரில் மூழ்கடித்து விட்டன என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த வெள்ள நிலைமையை எதிர்பார்த்து கடந்த நாட்களில் மணல் அணைகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும் , அவை அனைத்தும் ஒரு இரவில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன எனவும்  குறிப்பிட்டுள்ள அவர், இயற்கையினால் ஏற்படும் பாதிப்புக்களை தடுப்பதற்கு பெரிதாக எதனையும் செய்துவிட முடியாது என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.

Share This Post

Post Comment