சீனாவுடனான கனடாவின் நெருக்கம், அமெரிக்காவுடனான சுமூக வர்த்தக உறவுகளைப் பாதிக்கும் – றோனா அம்றோஸ்

ekuruvi-aiya8-X3

pm_rona_ambroseஅண்மையில் அமெரிக்காவினால் முன்னெடுக்கப்பட்ட “அமெரிக்கப் பொருட்களையே வாங்குதல்” என்ற கொள்கை அமுலாக்கப்படும் நிலை உருவாகாமல் இருக்க பல மாதங்களாக அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தி லிபரல் அரசு வெற்றி கண்டது. எதிர்க்கட்சியான பழமைவாதக் கட்சியும் இதற்கு ஆதரவாக குரல் கொடுத்ததுடன், லிபரல் அரசின் இந்தமுயற்சியை இட்டு மகிழ்ச்சி தெரிவித்திருந்தது.

இதற்கிடையே வட-அமரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக கனடா-அமெரிக்கா இடையே சில முரண்பாடுகளும், கருத்து வேற்றுபாடுகளும் எழுந்துள்ளன.  இதன் காரணமாக இருநாடுகளிலும் வர்த்தக முதலீடுகள் தொடர்பில் நிச்சயமற்ற ஒரு நிலை காணப்படுகின்றது.

இந்நிலையிலேயே சீனாவுடனான கனடாவின் உறவுகள் பற்றி ஆராயவேண்டியுள்ளது. ஜனாதிபதி ட்ரம்ப் சீனாவின் வர்த்தக நடவடிகைகள் தொடர்பாக கடினமான நடவடிக்கைகள் தேவை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார். கனடாவுடன் மரக்குற்றிகள், பாற்பொருட்கள், சக்திவளம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருக்கும் அதேவேளை, சகாயவிலையில் சீனாவில் இருந்து உருக்கு இறக்குமதி தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவொன்றில் கையொப்பம் இட்டுள்ளார்.

அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய பாதைகளில் பயணிப்பதை கனடா தவிர்க்கவேண்டும். உதாரணமாக சீனாவின் தலைமையின் கீழ் இயங்கும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியுடன்  (Asian Infrastructure Investment Bank) இணைந்து கொள்ளவும் நிதி உதவி வழங்கவும் , சீனாவின் தூண்டுதலின் பேரில் பிரதமர் ரூடோ எடுத்த முடிவு, அமெரிக்காவின் விருப்பங்களுக்கு முரணானதாகும்.

Share This Post

Post Comment