தீவிரவாதிகளின் பிடியிலிருந்து தப்பிய சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பிரதமர்

ekuruvi-aiya8-X3

pm1ஈராக் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை பிரதமர் ஜஸ்ரின் ரூடோ நிறைவேற்றி வைத்துள்ளார்.

யாசிடி இனத்தைச் சேர்ந்த 13 வயதான எமாட் மிஷ்கோ ரமோ என்ற குறித்த சிறுவன், கடந்த 2014 ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அகதி முகாமில் அவன் இருக்கும் ஒளிப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த நிலையில் கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டான்.

இந்நிலையில் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து தன்னை மீட்ட கனேடிய பிரதமரை சந்திக்க வேண்டும் என்று குறித்த சிறுவன் தனது ஆசையை வீடியோ ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியிருந்தான். இதனை அறிந்த யாசிடி இனத்தைச் சேர்ந்த ஒரு அமைப்பினர் மனிடோபா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்தனர்.

அதனை ஏற்றுக் கொண்ட பிரதமரும் குறித்த சிறுவனுடன் ஐந்து நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகின்றது.

Share This Post

Post Comment