கனடாவின் புதிய முயற்சி – 10000 பணி விசாக்கள் அறிவிப்பு

Thermo-Care-Heating

can_flag10000 பணிக்கால விசாக்களை இளம் வயது ஐரிஷ் மக்களுக்கு வழங்கஇருப்பதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த விசாவானது 18 மற்றும் 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், இளம் தொழில் முறை மற்றும் விடுமுறை காலத்தில் பணியாற்ற விருப்பமுடையவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

2018 ஆம் ஆண்டு கனடா குடியேற்ற அனுமதி 310000 ஆகவும், இதனையே 2020 ஆம் ஆண்டுகளில் 340000 ஆக அதிகரிக்கவுள்ளதாகவும் கனேடிய அரசு தெரிவித்துள்ளது.

இந்த குடியேற்றத்தின் காரணமாக கனேடிய சமூகம் மேம்படுவதோடு, பொருளாதாரம் வளர்ச்சியடையும் எனவும் கனேடிய குடிவரவு சேவை அறிவித்துள்ளது.

அதே சமயத்தில் நாட்டு மக்களின் சுகாதாரம், பாதுகாப்பு என்பவற்றோடு எல்லைப் பாதுகாப்புகள் என்பனவும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகில் முன்னேற்றமடைந்த பொருளாதார நாடுகள் வரிசையில் ஏனைய நாடுகளை விடவும் கனடா சிறந்த நிலையில் உள்ளது என கனடா அரசு தெரிவித்துள்ளதோடு, பொருளாதார முன்னணியில் நாட்டைக் கட்டியெழுப்ப குடியுரிமை என்பது முக்கிய பங்கு எனவும் கூறியுள்ளது.

ideal-image

Share This Post

Post Comment