பயணி இடையூறு: ரொறன்ரோவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட விமானம்

ekuruvi-aiya8-X3

air_canada-04ரொறன்ரோவிலிருந்து ஹங்கேரி நோக்கி பயணித்த எயர் கனடா விமானமொன்று மீண்டும் ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடற்ற பயணியொருவரின் செயற்பாட்டால் விமான பணியாளர் ஒருவர் காயமடைந்ததை தொடர்ந்தே விமானம் மீண்டும் ரொறன்ரோவுக்கு திரும்பியுள்ளது.

குறித்த பயணி அனைவருக்கும் பெரும் இடையூறாக செயற்பட்ட நிலையில், அவரை விமான ஊழியர்கள் கட்டுபடுத்தியுள்ளனர். பயணியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் போது பயணிக்கும், விமான பணியாளர்களுக்கும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இதன்போது பணியாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

விமானம் தரையிறக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விமானம் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டு அனைவருக்கும் உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக அந்த நபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து, குறித்த விமானத்தில் பயணித்த ஏனைய 266 பயணிகளும், வேறு விமானத்தில் ஹங்கேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Share This Post

Post Comment