கத்தியால் குத்தப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி

ekuruvi-aiya8-X3

can_ambulanceNuit Blanche கொண்டாட்டங்களில் ரொரண்டோ நகரம் திளைத்திருந்த வேளை, நபர் ஒருவர் மீது கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், கடுமையான காயங்களுக்கு உள்ளான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Yonge & Shuter Sts பகுதியில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் வீழ்ந்து கிடப்பதாக அவசர விபத்துப் பிரிவினருக்கு கிடைத்த அழைப்பின் பேரில், அவர்களால் குறித்த நபர் நள்ளிரவில் மீட்கப்பட்டுள்ளார்.

20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவரே தன் மீது இரு தடவைகள் கத்தியால் குத்தியதாக, காயமடைந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளனர். எனினும், குற்றவாளி குறித்த எந்தவொரு தகவலையும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

Share This Post

Post Comment