கனடா கொள்வனவு செய்ய திட்டமிட்டிருந்த F-35 போர் விமானம் தயார்

ekuruvi-aiya8-X3

0308f35கனடா கொள்வனவு செய்வதற்கு திட்டமிட்டிருந்த F-35  போர் விமானம் தயாராக இருப்பதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.

கடந்த ஒருவருடமாக அதிகூடிய செலவுகள் மற்றும் அரசியல் காரணங்களால் தாமதமாகிய இந்த போர் விமானம் தற்போது தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட ஐக்கிய அமெரிக்காவின் விமானப்படைத் தலைவர் ஹெர்பர்ட் கார்லைஸ், ‘விமானங்களுக்கு இடையே தகவல்களை பரிமாறிக் கொள்வது போன்ற சில விடயங்கள் தற்போது F-35A விமானத்தில் செய்ய முடியாதவையாக உள்ளது. இவை எதிர்வரும் மாதங்கள் மற்றும் வருடங்களில் அறிமுகப்படுத்தப்படும்.

அத்துடன், விமானிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் எஜெக்ஸன் இருக்கை உள்ளிட்ட சில தொழில்நுட்ப திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

F-35  இல் மூன்று பதிப்புக்கள் உள்ளன. இவற்றில் F-35A பொதுவானது. இவற்றில் F-35 B மற்றும் F-35C ஆகியன முறையே ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் மற்றும் கப்பல்படைக்கு முதன்மையானவையாக விளங்குகின்றது.

இந்நிலையில் கனடாவின் முன்னைய அரசான பழமைவாத அரசு இதனை வாங்குவதற்கு திட்டமிட்டிருந்தது. எனினும் கடந்த வருடம் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது லிபரல் கட்சி கனடாவின் CF-18 போர் விமானங்களை மாற்றுவதாக வாக்குறுதி அளித்தது. அதேவேளை F-35  விமானங்களை வாங்குவதில்லை எனவும் கூறியது.

இந்நிலையில் அண்மையில் கனேடிய லிபரல் அரசால் கனடாவின் CF-18 விமானங்களுக்கு பதிலாக விநியோகத்தர்கள் தங்களது ஜெட் விமானங்களுக்கான செலவுகள் மற்றும் திறன்களை கோடிட்டு சாத்தியமான விபரங்களை அனுப்பி வைக்குமாறு கடந்த வெள்ளிக்கிழமை கனேடிய மத்திய அரசு அறிவித்திருந்தது.

அதற்கேற்ப போயிங் நிறுவனம், டஸ்ஸால்ட் ஏவியேஷன், யூரோஃபைட்டர், லொக்கீட் மார்டின் மற்றும் சாப் குழு ஆகிய ஐந்து நிறுவனங்கள் முன்வந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment