உச்சநீதிமன்ற நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் முறையில் மாற்றம் – பிரதமர்

Facebook Cover V02

can_pm_13கனடிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளை மாற்றுவதாக பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

இப்புதிய செயல் முறையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றத்திற்கு வேட்பாளர்களை பரிந்துரைக்க முன்னாள் பிரதம மந்திரி கிம் கம்ப்பெல் தலைமையில் ஒரு புதிய சுதந்திரமான மற்றும் நடுநிலையான ஆலோசனை சபையை அமைத்துள்ளார்.

புதிய நியமன செயல்முறை வெளிப்படையான மற்றும் உயர்தரமான பொறுப்புடைமையை ஏற்படுத்தும் என பிரதமர் தெரிவித்துள்ளார். விண்ணப்ப செயல்முறை வெளிப்படையானதாக இருக்கும்.கனடிய வழக்கறிஞர்அல்லது நீதிபதி இப்பதவிக்கு பொருந்துபவர் இரு மொழி செயல்பாடு கொண்ட எவரும் உயர் நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்ப்பெல் தலைமையிலான சபையில் ஏழு அங்கத்தவர்கள் அங்கம் வகிப்பர்.

Share This Post

Post Comment