அகதிகள் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுத்தும் நோக்கம் இல்லை – குடிவரவு அமைச்சர்

Facebook Cover V02

ahmeed_Hussenஅமெரிக்காவினால் சர்ச்சைக்குரிய புதிய குடிவரவுச் சட்டங்கள், பயணத் தடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கனடாவினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அகதிகள் தொகையில் மாற்றங்கள் ஏதும் ஏற்படுத்தும் நோக்கம் இல்லை எனக் கனேடியக் குடிவரவு அமைச்சர் அஹ்மட் ஹூசேன் தெரிவித்துள்ளார்.

அதிக எண்ணிக்கையான தஞ்சக் கோரிக்கையாளர்களை கனடாவினுள் அனுமதிக்குமாறு NDP கட்சி, மனித உரிமைக் குழுக்கள் மற்றும் அகதிகளுக்கான வழக்கறிஞர்கள் ஆகியோரிடம் இருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் இவ்வேளையில், அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

“காலம் காலமாக நாம் அதிகளவிலான அகதிகளை உள்வாங்கியுள்ளோம், அதையே நாம் தொடர்ந்தும் பேணுவோம்” என அமைச்சர் தெரிவித்தார்.

நியமிக்கப்பட்ட குடிவரவு இலக்குகளின்படி 2017 ஆம் ஆண்டில் 40,000 அகதிகளை ஏற்க கனடா திட்டமிட்டுள்ளது என்றும் மத்திய சமூக அபிவிருத்தி அமைச்சர் Jean-Yves Duclos தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment