தேநீர் கடைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு

ekuruvi-aiya8-X3

can_31_1கனடாவின் மொனிடோபாவில் அமைந்துள்ள ஸ்ராஸ்பேர்க் தேனீர் கடைக்கு அருகில் நேற்று (சனிக் கிழமை) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து, அதற்கு அருகில் உள்ள சுகாதார அறிவியல் மையம் சுமார் ஒரு மணிநேரம் மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலிஸார், 700 வில்லியம் அவன்யூ பகுதியில் உள்ள குறித்த தேனீர் கடைக்கு அருகில் நேற்று இரவு சுமார் 10.00 மணியளவில் இருவர், ஒருவரை துரத்திக் கொண்டு வந்ததாகவும், அவர்கள் கைத்துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகின்றது. இதன்போது மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

ஆயினும் குறித்த பகுதியில் இருந்து மூவரும் தப்பிச் சென்றுள்ளதாகவும், இதன்போது யாரும் காங்களுக்கு இலக்காவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் தெரிய வராத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Post

Post Comment