ரோஹிங்யா மக்களுக்காக கனடாவில் போராடும் தமிழ் இளைஞன்

ekuruvi-aiya8-X3

you2சிரிய அகதிகளை ஏற்றுக்கொள்வது போன்று ரோஹிங்யா அதிகளையும் கனடா ஏற்றுக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கோரிக்கையை கனேடிய அரசாங்கத்திடம், இலங்கை மாணவர் ஒருவர் முன் வைத்துள்ளார்.

டொராண்டோ பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு அரசியல் அறிவியல் மற்றும் குற்றவியல் கற்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தமிழ் மாணவர் பிடசன்னா ஷண்முகதாஸ் (Pitasanna Shanmugathas) இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

ரோஹின்ய மக்களுக்கு ஆதரவாக மனு கைச்சாத்திடும் நடவடிக்கை ஒன்றை ஷன்முகதாஸ் ஆரம்பித்துள்ளார்.

இதற்காக அவர் Manitoba எம்.பி. மற்றும் NDP தலைமை வேட்பாளர் Niki Ashton ஆகியோரின் உதவிகளை பெற்றுள்ளார்.

“இந்த மக்கள் தங்கள் சொந்த நாட்டில் குடியுரிமை பெற்றுள்ளனர் மற்றும் பல தசாப்தங்களாக நிலையற்ற நிலையில் வாழ்வதோடு, புறக்கணிக்கப்பட்டனர்” என ஷண்முகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

பல மைல்களுக்கு அப்பால் இந்த நெருக்கடிகள் தொடர்கின்றன. ஆனால் நம் அரசாங்கங்கள் இந்த மக்களுக்காக செயல்பட வேண்டும் ஷண்முகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் காரணமாக 1990 ஆம் ஆண்டு கனடாவில் குடிபெயர்ந்த இலங்கை தமிழ் குடும்பத்தில் ஷன்முகதாஸ் பிறந்துள்ளார்.

சிறுபான்மையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து தான் நன்கு அறிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“என் சொந்த வரலாற்றை நான் இணைக்க முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.

பொது மக்களுக்கு நடக்கும் அட்டூழியங்கள் குறித்து கண்பார்வையற்றவராக நடந்து கொள்ளும் ஆங் சான் சூகி அம்மையாருக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமை ரத்து செய்யும்படி அவர் தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் முற்றிலும் ஒரு மாயக்காரராகிவிட்டார், இனவெறித் தாக்குதல்களுக்கு அவர் மிகவும் உடந்தையாக உள்ளார், கனேடிய மதிப்புகளை அவர் புறக்கணித்துள்ளார் என ஷண்முகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Share This Post

Post Comment