முதியவரை காப்பாற்றும் போது சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர் – வழக்கு தொடர்ந்த தந்தை

Facebook Cover V02

can29_1கனடாவில், கடந்த மாதம் கொலை முயற்சியில் இருந்து முதியவரைக் காப்பாற்ற முயன்றபோது சுடப்பட்ட இளைஞரின் தந்தை தற்போது வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

கனடாவின் ஹாமில்டன் நகரில் கடந்த மாதம், மசூதிக்கு வெளியே இரண்டு மர்ம நபர்கள் முதியவர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த Al-hasnawi எனும் 19 வயது இளைஞர், முதியவரைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால், மர்ம நபர்கள் அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர்.

அதன் பின்னர் படுகாயம் அடைந்த இளைஞர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, கொலையாளிகளில் ஒருவன் கைது செய்யப்பட்டான்.

இந்நிலையில், Al-hasnawi-யின் தந்தை மற்றும் சகோதரர்கள் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளனர். அதில், யோசிப்பின் மரணத்திற்கு காரணமானவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், Al-hasnawi-ஐ மருத்துவமனையில் அனுமதிக்க பொலிஸார் தாமதப்படுத்தியாகவும், குற்றவாளிகளைப் பிடிக்க அலட்சியம் காட்டுவதாகவும், அதனால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதன் பின்னர், Al-hasnawi-யின் இறப்பால் தங்களது குடும்பம் வறுமையில் உள்ளதாகவும், அதற்கு இழப்பீடாக 10 மில்லியன் டொலர்களை வழங்க வேண்டும் என மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

Share This Post

Post Comment