பெற்றோர், பேரன் பேத்தி ஆகியோரை வரவழைக்கும் திட்டம் – குலுக்கல் முறையில் 10,000 விண்ணப்பதாரிகள் தெரிவு

ekuruvi-aiya8-X3

can_flagதமது பெற்றோர் அல்லது பேரன் பேத்தி ஆகியோரை கனடாவிற்கு வரவழைக்க விரும்புவோரைத் (Sponsors) தெரிவு செய்ய கனேடியக் குடிவரவுத் திணைக்களத்தால் இவ்வருட ஆரம்பத்தில் அறிமுகம் செய்யப்பட்ட குலுக்கல் முறைமூலம் 10,000 இறுதி விண்ணப்பதாரிகள் (Sponsors) தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தமது பூரணமான விண்ணப்பத்தையும், ஆவணச் சான்றுகளையும் சமர்ப்பிப்பதற்கு 90 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

கனேடியக் குடிவரவுத் திணைக்களத் தரவுகளின்படி, இந்த 10,000 விண்ணப்பதாரிகளும் (sponsos) ஏறத்தாள 17,000 பேரைக் கனடாவிற்கு வரவழைப்பதற்கு விண்ணப்பித்துள்ளனர். இக்குலுக்கல் முறை மூலம்  தமது பெற்றோர் அல்லது பேரன் பேத்தி ஆகியோரை கனடாவிற்கு வரவழைக்க 95,000 பேர் விருப்பந் தெரிவித்திருந்தனர். இவர்களில் இருந்து 10,000 பேர் மட்டுமே எழுமாற்றாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

விருப்பந் தெரிவித்திருந்த ஒவ்வொருவரையும் கனேடியக் குடிவரவுத்திணைக்களம் தனித்தனியே தொடர்பு கொண்டு அவர்களது விண்ணப்பம் தெரிவு செய்யப்பட்டதையோ அல்லது நிராகரிக்கப் பட்டதையோ அறிவித்துள்ளதுடன் , இத்தடவை தமது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் 2018 ஆம் ஆண்டு மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share This Post

Post Comment