பூர்வீக மக்கள் தொடர்பான சட்டங்கள், கொள்கைகளை மறு ஆய்வு செய்வதற்கு செயற்குழு நியமனம்

sdsd

Can_pm_3009கனேடிய பூர்வீக மக்கள் தொடர்பான அனைத்து மத்திய சட்டங்கள் மற்றும் கொள்கைகளை மறு ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் செயற்குழு ஒன்றை அமைத்துள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ நேற்று (புதன்கிழமை) அறிவித்துள்ளார்.

சுதேச விவகார அமைச்சர் கரோலின் பென்னெட், மீன்பிடித்துறை அமைச்சர் டொமினிக் லெபிளேன்க், நீதித்துறை அமைச்சர் ஜோடி வில்சன், சுகாதார அமைச்சர் ஜேன் பில்பொட், குடும்ப நலத்துறை அமைச்சர் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சர் உள்ளிட்ட ஆறு மத்திய அமைச்சர்களை உள்ளடக்கி இந்த செயற்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்படி செயற்குழு பாரம்பரிய மற்றும் ஒப்பந்த உரிமைகளுக்கு மதிப்பளிப்பதுடன் அரசியலமைப்பு கடமைகளையும் உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பழங்குடி மக்களின் உரிமைகள் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனத்திற்கு இணங்கி செயற்பட உதவும் என்பதுடன் பிரதமர் ஜஸ்ரின் ரூடோவின் லட்சிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் நல்லிணக்க செயற்பாடுகளும் பங்களிப்பு வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment