கனடாவிற்கு குடிபெயர்ந்த இந்திய இளைஞர் திடீர் மரணம்

Thermo-Care-Heating

elai2கனடாவிற்கு சென்ற இந்திய இளைஞர் ஒருவர் அங்கு சென்ற இரண்டாவது நாளிலேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரை சேர்ந்தவர் சஜாஜ் ஜுனேஜா (வயது 19) பள்ளிப்படிப்பை முடித்துள்ள இவர் மேற்படிப்பு படிக்க கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்துக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள லேம்ப்டன் கல்லூரியில் சஜாஜுக்கு இடம் கிடைத்துள்ளது, கல்லூரி படிப்பை முடித்து விட்டு அங்கேயே நிரந்தரமாக வாழ அவர் நினைத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய், அறையில் தூங்கி கொண்டிருந்த சஜாஜ் அடுத்தநாள் காலை வெகுநேரமாகியும் எழவில்லை. அருகிலிருந்தவர்கள் சஜாஜை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இளைஞரின் சடலம் டொரோண்டோவில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

சஜாஜின் மரணத்தில் மர்மம் விலகாத நிலையில் அவர் சடலத்தை தாய் நாட்டுக்கு கொண்டு வர முடியாமல் குடும்பத்தார் தவித்து வருகிறார்கள்.

இது குறித்து சஜாஜின் தந்தை இந்தர்ஜீத் கூறுகையில், 12 லட்சத்துக்கும் மேல் கடன் வாங்கி என் மகனை கனடாவுக்கு அனுப்பி வைத்தேன், அங்கு நிரந்தமாக வாழ வேண்டும் என்ற அவனின் கனவு சிதைந்து விட்டது.

சஜாஜ் சடலத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவ வேண்டும், இது தொடர்பாக அவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறியுள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment