கனடாவின் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தில் முறைகேடுகள் -ஆய்வு

ekuruvi-aiya8-X3

canada_2309லிபரல் அரசு தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தை விரிவாக்க உத்தேசித்துவரும் அதேவேளை, இத்திட்டத்தில் முறைகேடுகள் காணப்படுவதாக  ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கமர்த்த முன்னதாக, அந்த வெற்றிடங்களுக்கு அல்லது அப்பணிகளைச் செய்வதற்கு  கனடாவில் பணியாளர்கள் இல்லை என்பதை, வேலைகொள்வோர்   உறுதிப்படுத்தவேண்டும் என்பது விதி. ஆனாலும் வெளிநாட்டுப் பணியாளர்கள் வேலைக்கமர்த்தப்பட்ட சந்தர்ப்பங்களில், இந்நடைமுறை சரியாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என, இத்திட்டம் தொடர்பாக நடாத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

தற்போது பேச்சுவார்த்தைக் கட்டத்தில் இருக்கும் கனடாவின் சுதந்தர வர்த்தக ஒப்பந்தங்கள் அமுலுக்கு வருமாயின், இவ்விதி அமுல்படுத்தப்படுவதில் மேலும் தளர்வு ஏற்பட்டு, வெற்றிடமான இடங்களிற்கு கனேடியர் ஒருவரைத் தேடாமல், நேரடியாகவே வெளிநாட்டுப் பணியாளர்களை நியமிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் இவ்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

இத்திட்டத்தின் மூலம் கனடா வந்தடைந்த வெளிநாட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை 2010-2014 காலப்பகுதியில் சிறிதளவு வீழ்ச்சியைக் கண்டிருந்தது. ஆயினும் 2014 இன் பின்னர் இத்திட்டத்தின் மூலம் கனடா வந்தடைந்த வெளிநாட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை 194,000 ஐயும் விட அதிகமானது என இவ்வறிக்கை கூறுகிறது.

Share This Post

Post Comment