ஸ்காபரோ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு

Facebook Cover V02

Accident_Eஸ்காபரோ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பாஸ்மோர் அவென்யூ மற்றும் மிடில்பீல்ட் வீதிப் பகுதியில், நேற்று முன் தினம் (புதன்கிழமை) இரவு எட்டு மணியளவில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தின் போது வாகனத்தினால் மோதுண்ட பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதனை ரொறன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவத்தை அடுத்து அந்த பகுதி ஊடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், விபத்துக்கான காரணம், உயிரிழந்தவரின் பெயர் விபரங்கள் உள்ளிட்ட மேலதிக விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவிலலை.

Share This Post

Post Comment