றோயல் வங்கியில் பணிபுரியும் சுமார் 450 பேர் பணி நீக்கம்

ekuruvi-aiya8-X3

bank_2கனடா றோயல் வங்கியில் பணிபுரியும் சுமார் 450 பேரைப் பணி நீக்கம் செய்ய வங்கி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

கணணி மயமாக்கல், இலத்திரனியல் தரவு மேலான்மை, நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக நிதி முதலிடப்படவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாலேயே இவர்கள் நீக்கப்படவுள்ளதாக வங்கி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

இதேவேளை இந்த பணி இழப்பினால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கான நீடித்த கால கொடுப்பனவு உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் வங்கி நிர்வாகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

வங்கி நடவடிக்கைகளை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்தும் போது, எந்தெந்த பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதோ, அவ்வாறான பகுதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், அந்த வகையில் கணணி மயமாக்கல், இலத்திரனியல் தரவு மேலான்மை, நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக நிதி முதலிடப்படவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share This Post

Post Comment